தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கை கோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்