நாட்டிற்கு இறக்குமதி செய்யக்கூடிய சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சு வெளியிடப்படவுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் ஸ்டோவ், தட்டுகள், உணவு கிளறிகள், கோப்பைகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள் மற்றும் மாலைகள் ஆகியவை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் அடங்கும்.
எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கு அனுமதியளிக்கப்படாது என்பது அவை இறக்குமதி செய்யப்பட நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
N.S