வார இறுதி மின்வெட்டு அட்டவணை

Date:

வார இறுதி மின்வெட்டு அட்டவணை அறிவிப்பு வார இறுதி நாட்களில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை இரண்டு மணி நேரமும், ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமலில் இருக்கும்.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேபோல், ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி நேரம் வரை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும்.

இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...