இலங்கையின் செயற்பாடு குறித்து சீன ஜனாதிபதி அதிருப்தி!

Date:

”சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வெளிப்படையான நியாயமான சூழல் அவசியம்” என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை தீர்மானங்களை எடுக்கும்போது வெளிநாடுகளின் செல்வாக்கிற்கு உட்படுவது குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கவலை வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் சினேகபூர்வமான சுமூகமான முறையில் இடம்பெற்றதாகவும் சீன ஜனாதிபதி மூன்றாவது நாட்டின் பெயரை குறிப்பிடவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போது சீன பிரதமர் லீ கியாங் இலங்கை சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு விதித்துள்ள தடை குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதேநேரம், எரிபொருள் மீள்நிரப்புதலுக்காகவே ஜேர்மன் கப்பலுக்கு அனுமதி வழங்கபட்டதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது நலன்களுக்கு எதிராக எந்த நாடும் தனது பகுதியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை எனவும் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 கோடி இலஞ்ச வழக்கு: சாகலவுக்கும் தொடர்பு?

பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன...

இலங்கையில் 50 பேரில் ஒருவருக்கு போதைப்பழக்கம்

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக மகளிர், சிறார்...

இலங்கையில் 12 மில்லியன் மக்கள் வரி செலுத்துவதாக தகவல்

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள...

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...