கொழும்பு துறைமுக நகரத்தில் நவீன வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆசிரி துறைமுக நகர வைத்தியசாலைக்கும் (தனியார்) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஆசிரி போர்ட் சிட்டி மருத்துவமனை (தனியார்) இந்த மருத்துவமனைகளை நிறுவி பராமரிக்கும் வாய்ப்பைப் பெறவுள்ளது.
இந்த மருத்துவமனை திட்டத்தில் சுமார் 500 படுக்கைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.