மஹிந்த பதவி விலகினால் மீண்டும் வருகிறோம் – ஜனாதிபதிக்கு விமல் அணி நிபந்தனை

0
231

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் மீண்டும் அரசாங்கத்தில் இணையத் தயார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியை விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் நேற்று (16) ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாகவும், நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவன்ச தனது குடும்பத்தில் மூத்த சகோதரர் போன்றவர் என மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச ஒருமுறை கூறியிருந்தார்.

மொட்டு முகாமில் ‘அப்பா’ என்று அழைக்கப்படும் மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யுமாறு அதே மூத்த சகோதரர் இப்போது அழுத்தம் கொடுப்பது ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here