பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் அவசியம் – அரவிந்தகுமார் தெரிவிப்பு!

Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்

பத்தரமுல்ல இசுருபாயவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய சூழ்நிலைக்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அல்ல 2000 ரூபா வழங்கினால் கூட அது போதாது. எனவே குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 2000 ரூபா வழங்கப்பட வேண்டும்.

200 ரூபா சம்பள அதிகரிப்புக்கே கம்பனிகள் தயாராக உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது. குறைந்தபட்சம் ஆயிரத்து 1700 ரூபாவது அவசியம் கிடைக்கவேண்டும். 2000 ரூபாவுக்கு மேல் செல்லவேண்டும் .

பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றது முதலே நஷ்டம் என்ற புராணத்தை கம்பனிகள் பாடிவருகின்றனர். இலாபம் இல்லையேல் தோட்டங்களை அரசிடம் கையளிக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வாறு கையளிக்கப்படுவதில்லை. காரணம் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்கவில்லை என தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...