இலங்கையில் கடும் உணவுத் தட்டுப்பாடு – ரணில் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Date:

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இந்தியக் கடன் வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் திட்டம் முதல் வாரத்தில் முடிவடைவதால் அடுத்த மாதம் இலங்கை பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற தனியார் வங்கியாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் வீதியில் இறங்கிய போதிலும் நாடாளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...