இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு மற்றவர்களிடம் இல்லாத பல தகுதிகள் தனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் தந்தையின் பரம்பரையிலோ, வேறு அரசியல்வாதியின் இடத்திலோ அரசியலுக்கு வந்தவன் அல்ல என்றும், அமைச்சர் என்ற பொறுப்பை மோசடி, ஊழலின்றி நிறைவேற்றி, அமைச்சை லாபகரமாக்கியதை நாடு அறியும் என்றார்.
திறமையான இராணுவ அதிகாரிகள், அதிசிறந்த விளையாட்டு வீரர்கள், பரம்பரை பரம்பரையாக உரிமை கோருபவர்கள், பாரம்பரிய கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு இனிமேல் ஜனாதிபதி வேட்புமனு வழங்கக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.
பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்பும் திறமை உள்ள ஒருவருக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.