ஊழியர் சேமலாப நிதிக்கான வட்டி விகிதம் 13 சதவீதமாக அதிகரிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர்

Date:

ஊழியர் சேமலாப நிதிக்கு வழங்கப்பட்டிருந்த 9 சதவீத வட்டி விகிதத்தை 13 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,முன்னதாக ஊழியர் சேமலாப நிதிக்கு 9 சதவீத வட்டி விகிதமே வழங்கப்பட்டிருந்தது எனவும், எமது நாட்டில் ஊழியர் சேமலாப நிதியின் வைப்புத் தொகை மிகவும் அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.இதில் 27 இலட்சம் உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.2023 ஆம் ஆண்டு ஊழியர் சேமலாம நிதியின் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்து, அதில் ஈட்டிய பணத்தில் 9 சதவீதத்திற்கு பதிலாக 13 சதவீதத்தை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.இந்த வட்டி விகிதம் குறைந்தபட்ச விகிதமாக 9 வீதமே காணப்பட்டிருந்தது.ஆனால் இன்று இதனை 13 சதவீதத்தை அதிகரித்திருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.அந்த நிதியின் முதலீடு உறுப்பினர்களுக்கே வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...

அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட...