யாழில் உதயமானது புதிய கட்சி!

Date:

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று முதல் ஆரம்பித்து வைக்கபடுவதாக அந்த கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் புலேந்திரன் உதயகுமார் என்பவரை தலைவராக கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நாம் வெகுஜன அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம் .

கல்வி, வாழ்வாதாரம், போரால் பாதிக்கப்பட்டோர் என பலதரப்பட்ட சேவைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம். அதனடிப்படையில் இன்று முதல் எமது சேவைகளை ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.

எமது மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலங்கையின் அரசியல் அமைப்பிற்குட்பட்டு செயற்படுத்த இருக்கின்றோம்.

தற்பொழுது எமக்கு தேர்தல் நோக்கமில்லை. இருந்தாலும் இது குறித்து தேர்தல் காலத்திலேயே இறுதி முடிவினை எடுப்போம். இன, மத, மொழி வேறுபாடின்றி பலதரபட்ட மக்களிற்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம்.

தமிழ் இனம்சார்ந்த பிரச்சினைகளுக்காக பல கட்சிகளும் குரல் கொடுத்து கொண்டிருக்கின்ற நிலையில் அந்த கட்சிகளின் கண்ணுக்கு புலப்படாத பொதுமக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவையாற்றுவது எமது நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...