அமைச்சரவை எப்போது , பிரதமரிடம் அனுர

0
201

அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட இடமளிக்கக் கூடாது எனவும் ஜாதிக ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதிலும் இது தொடர்பில் அமைச்சர்களிடம் கேட்கப்பட வேண்டிய வாய்மொழி கேள்விகள் பிற்போடப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை எப்போது நியமிக்கப்படும் என அநுர திஸாநாயக்க பிரதமரிடம் கேட்டுள்ளார். அமைச்சரவையை நியமிப்பதற்கான திகதியையாவது பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் அது பிற்போடப்பட்டால் அதற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here