சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்தானது

0
86

பெட்ரோலியப் பொருட்களின் நீண்டகால இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையை இலக்காகக் கொண்டு, சீனா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சினோபெக் எரிபொருள் எண்ணெய் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி, Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd நிறுவனத்திற்கும் அதன் தாய் நிறுவனத்திற்கும் இடையில் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இது தொடர்பாக Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd மற்றும் சீனா மற்றும் சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரைகளின்படி நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here