நாட்டில் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய சஜித் நடவடிக்கை

Date:

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலகா சிங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைகொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு முன்னெப்போதையும் விட வலுவான ஆதரவை வழங்குமாறு இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இந்நிலைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் செயற்படுத்தப்பட்டுவரும் “எதிர்க்கட்சியின் மூச்சு” வேலைத்திட்டம் மூலம் 50 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் இதன் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டதோடு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியால் பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இதன்படி, சிறிய...

Lucky Baskhar திரில்லர் திரைப்படமும் NDB நிதி மோசடியும்!

தேசிய அபிவிருத்தி வங்கி National Development Bank (NDB) வெளியிட்டுள்ள தகவலின்படி,...

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...