காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி செயலகம் தடை

Date:

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள எந்தவொரு நிலமும் விநியோகிக்க கூடாது என ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் மூத்த உதவிச்  செயலாளர் ஏக்கநாயக்காவின் ஒப்பத்துடன் நேற்றைய தினம் PS/PSB/AS-02/LAND/2023 இலக்க கடிதம் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் நெடுங்கேணிப் பகுதியில் ஓர் சீனித் தொழிற்சாலைக்கு அரச காணியினையும் அதேபோன்று காண சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உட்பட்ட காணியை சவுதிஅரேபியா நாட்டிற்கும் வழங்க முற்படுவதான செய்திகள் வெளிவந்தன.

இவ்வாறு செய்தி வெளிவந்த நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் இந்த உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது.

இருந்தபோதும் காணி விநியோகத்துடன் தொடர்புபட்ட ஏனைய திணைக்களங்களிற்கு இவ்வாறான அறிவித்தல் இதுவரை வழங்கப்படவில்லை.

அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தபோது காணி விநியோகத்தில் உள்ள இடர்பாடுகள் மற்றும் ஆக்கிரமிப்பு நோக்கங்களை சுட்டிக்காட்டி காணி  விநியோக நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...

அரசியல் + பாதாள உலகம்! சிக்கும் முக்கிய புள்ளிகள்

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி...

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...