பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினருடன் கலந்தாலோசிக்காமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கினார் என அக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தற்போதைய தலைவரான பேராசிரியர் சரித ஹேரத் இணையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
விக்ரமசிங்க ஆட்சியில் இருந்த போது மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். நிகழ்ச்சியை நடத்திய ஊடகவியலாளர் சரித ஹேரத்திடம் மத்திய வங்கி உள்ளிட்ட விடயங்கள் உட்பட நிதியமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பான தீர்மானம் ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது மத்திய வங்கியை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.