பஸ் – லொறி மோதி விபத்து 21 பேர் காயம்

0
188

இன்று அதிகாலை கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறியொன்றும், அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தும் ஹங்வெல்ல எம்புல்கமவில் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு அவிசாவளை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்ஸில் பயணித்த 20 பேரும் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஹோமாகம மற்றும் நவகமுவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here