தமிழ்ப் பொது வேட்பாளர் வேண்டாம்! தமிழ்க் கட்சிகள் ரணிலுக்கே ஆதரவு – அஸாத் ஸாலி கூறுகின்றார்

Date:

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் எல்லாம் தேவையில்லை. தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முஸ்லிம் எம்.பிக்களும் ரணில் பக்கமே நிற்பார்கள்.”

– இவ்வாறு முன்னாள் ஆளுநரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்தார்.

இது தொடர்பில்ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனினும், இந்த வேலைத்திட்டத்தைக் குழப்பும் முயற்சியில் எதிரணிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்கள் ரணில் பக்கமே உள்ளனர்.

தமிழ்ப் பொது வேட்பாளர் அவசியமில்லை எனத் தமிழ்க் கட்சிகள் கூறுகின்றன. சி.வி. விக்னேஸ்வரன், ரணிலுக்கே ஆதரவு. அவர் ஓய்வுபெற்ற நீதியரசர். நாட்டை எவரால் நிர்வகிக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில்தான்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...