இந்தியாவில் விமான விபத்து 242 பயணிகள் நிலைமை?

0
188

இந்தியாவின் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இலண்டனுக்கு புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது

AI 171 என்ற இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வருவதுடன், விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் 1.07 மணியளவில் குறித்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதுடன், விமானம் டேக் ஆஃப் ஆனபோது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போயிங்கின் முதல் அறிக்கை

விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்பதுடன், போயிங் நிறுவனம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

“ஆரம்ப அறிக்கைகள் குறித்து எங்களுக்குத் தெரியும், மேலும் தகவல்களைச் சேகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here