மஸ்கெலியாவில் மரத்தில் இருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாகப் பலி!

0
178

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் பிரவுண்லோ ஆடை தொழிற்சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் சிறுவன் விறகு வெட்டச் சென்று உயிரிழந்துள்ளார்.

சேனாதீர ரஞ்சித் துல்ஷான் (வயது 14.) மஸ்கெலியா சமனெளிய சிங்கள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன்.

இவர் இன்று காலை 10 மணிக்கு தனது அத்தையுடன் விறகு தேடி சென்ற போது அத்தை விறகு தேடி கொண்டிருந்த வேளையில் சிறுவன் மரத்தில் ஏறிய போது மரம் முறிந்து கீழ் பகுதியில் இருந்த கற்பாறையில் விழுந்ததால் தலை பகுதி அடி பட்டு அவ்விடத்திலேயே சிறுவன் உயிர் இழந்தார்.

மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here