பரீட்சை மீள்திருத்த கட்டணத்தில் மாற்றம்

0
204

2021 (2022) க.பொ.த சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு கட்டணம் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிக்கை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் குழுவுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு செலுத்தும் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு, பரீட்சை நிலைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் தினசரி செலவுகளை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here