பெந்தோட்ட, கம்பளை பிரதேச சபைகள் எதிர்கட்சி வசம்

0
124

எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த பெந்தோட்டை மற்றும் கம்பளை பிரதேச சபைகளின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

அதன்படி, பெந்தோட்டை பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (23) நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விஜேவர்தன பெரும்பான்மை வாக்குகளுடன் அந்தப் பிரதேச சபையின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோல, கம்பளை பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஹிருக வீரரத்ன பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here