அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி சட்டமா அதிபரின் சேவையை நீடித்த ரணில்!

Date:

இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அனுமதியை வழங்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது.

சட்டமா அதிபரின் பதவிக் காலம் இன்றுடன் (26) நிறைவடையவுள்ளது. அதேசமயம் ஏற்கனவே அவருக்காக ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசை நிராகரித்த அரசமைப்பு சபை இன்று விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி ஜனாதிபதி ரணில், சட்டமா அதிபரின் சேவைக் காலத்தை நீடித்திருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது.

முன்னதாக அரசமைப்பு சபைக்கு 8 பக்கங்களைக் கொண்ட காட்டமான கடிதமொன்றை சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிய ஜனாதிபதி ரணில், அரசமைப்புச் சபையின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...