கைதியின் கொலையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை!

0
21

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள் குழுவினரை சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதுடன், அதில் ஒரு கைதி உயிரிழந்ததாக கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமல் சில்வா நேற்று இரவு சமூக ஊடகங்களில் இதனை தெரிவித்தார்.

மேலும், குழுவின் தலைவர் வழக்கறிஞர் சேனக்க பெரேரா வெளியிட்ட பதிவில், நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டின் பிற சிறைச்சாலைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நேற்று இரவு சுமார் 11.00 மணியளவில் உயிரிழந்த கைதியின் உடல் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்த மரணத்தை தற்கொலையாகக் காட்டும் முயற்சியில் சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழு மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here