உருவ பொம்மை எரித்து கொழும்பில் இ.தொ.கா. ஆர்ப்பாட்டம்!

Date:

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று கொழும்பில் உள்ள இலங்கை தோட்ட அதிகார சபையின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக இன்று (9) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

தோட்டத் தொழிலாளர்கள் அலுவலகத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டபோது, தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரும், தண்ணீர் பீச்சு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

அதன் பின்னர், கொழும்பு 7 இல் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு முன்பாக புகைப்படங்கள் மற்றும் எதிர்ப்பு பதாகைகளை எரித்தனர். இதையடுத்து தோட்ட தொழிலாளர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...