கண்டியில் மீண்டும் சிறைச்சாலை அமைக்க அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

0
20

கண்டி பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் மீண்டும் ஒரு சிறைச்சாலையை அமைப்பதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“பழைய போகம்பர சிறைச்சாலை” என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையின் அதிகார வரம்பாக முழு இலங்கையும் அமையும் வகையில் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கண்டி நகர மையத்தில் அமைந்துள்ள பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தை சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், மூடப்பட்ட காலி மகமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் சிறைச்சாலையை அமைப்பதற்காக இதேபோன்ற மற்றொரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பையும் நீதி அமைச்சர் கடந்த 7ஆம் திகதி வெளியிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here