எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.