21 இந்தியர்கள் கைது

Date:

இணையவழி சூதாட்ட மோசடியில் ஈடுபட்ட 21 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, விசா காலாவதியான பின்னரும் கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்து இந்த மோசடியை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து இந்தக் குழுவைக் கண்டறிந்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகளை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...