Thursday, April 25, 2024

Latest Posts

ரணிலின் வெற்றிக்கான 134ஐ தயார் செய்துக் கொடுத்த பசில்! வாக்களித்தவர்கள் விபரம் இதோ!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முதலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதிலும், அவர் இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என எவரும் நினைக்கவில்லை.

அவருக்கு 120 வாக்குகள் கிடைக்கும் என செய்திகள் வெளியாகின. ஆனால் இறுதியாக 134 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். அந்த 134 வாக்குகள் எப்படி பெறப்பட்டன என்பது பற்றிய தகவல் எமக்கு கிடைத்துள்ளது.

அதன்படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் – 101

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் – 7

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் – 8

ஈபிடிபி எம்பிக்கள் – 2

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் – 2

மக்கள் ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் – 3

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் – 3

வாசுதேவ நாணயக்காரவின் கட்சி உறுப்பினர் – 1

பிள்ளையான் – 1

அரவிந்த் குமார் – 1

சி. வி. விக்னேஸ்வரன் – 1

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் – 2

எல். எம். அதாவுல்லா – 1

தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர் – 1

போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்ட உடனேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகள் இரண்டாகப் பிரிந்து டலஸுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என பலரும் நினைத்தனர்.

ஆனால், மொட்டு வாக்குகளைப் பாதுகாத்து 134 எம்.பி.க்கள் வரையிலான உயர் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கை பிரதானமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இதனை அவரது நிர்வாகத் திறனுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். மேலும், புதிய அரசாங்கத்தில் 14 வெவ்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் இணைந்துள்ளமை சர்வகட்சி அரசாங்கத்தின் பண்புகளை வெளிப்படுத்துவதாகக் கூறலாம்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.