இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையம் மன்னாரில் நடத்திய விவாதப் போட்டி

Date:

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இலங்கையில் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் பிரதேச மக்களுக்கான சுத்தமான குடி நீரை பெற்றுக்கொடுத்தல் எனும் செயற்றிட்டத்தின் இயங்கி வருகிறது.

வடமாகாணத்தின் மன்னார் மாவட்டங்களிலிருந்து மழைநீர் சேகரிப்பு தாங்கிகள் மூலம் பயனடைந்த பாடசாலை மாணவர்கள் இவ் விவாத போட்டியில் பங்கு பெற்றி உள்ளனர்.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் முதலாவது சுற்றில் பங்குபற்றி இரண்டாவது சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விவாத போட்டி இன்றைய தினம் (25) முருங்கனில் அமைந்துள்ள ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் மழைநீர் சேகரிப்பானது அனர்த்த முகாமைத்துவத்தில் குறிப்பாக வெள்ள மற்றும் வறட்சியின் போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க ஒரு சிறந்த தீர்வாக அமையும். /அமையாது/ எனும் தலைப்பில் இடம் பெற்றது.

நிகழ்வில் இலங்கை மழைநீர் சேகரிப்பு ஒன்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த சுற்று போட்டிகளும் இடம் பெறவுள்ள தோடு இரண்டாம் சுற்றில் பங்குபற்றிய ஆறு அணிகளில் மன்/ தலைமன்னார் அ.த.க.பா,மன்/பரிகாரி கண்டல் அ.த.க.பா ,மற்றும் மன்/ கட்டையடம்பன் றோ.க.த.க.பா ஆகிய மூன்று பாடசாலையின் அணிகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டன.

இன்று (25)போட்டியில் அரையிறுதிக்கு பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர்...

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...