தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் – லலித் பதிநாயக்கவுக்கு வழங்கப்பட்டது பொறுப்பு

Date:

வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் சில செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவரை பொலிஸ் நிர்வாகத்தின் பணிகளை கண்காணிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

புதிய பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் ஆராய தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோன் உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக பதவி நீக்கப்பட்ட நிலையில், லலித் பதிநாயக்க பொலிஸ் துறையின் அடுத்த உயர் அதிகாரியாகக் கருதப்படுகிறார்.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு அவரை அண்மையில் விடுதலை செய்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...