மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டிற்கு தீ வைத்த நபரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை கமகொட ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நேற்று பிற்பகல் குறித்த நபர் குடிபோதையில் வந்து தனது மனைவி வீட்டில் இருந்த வேளையில் அவரது வீட்டு வாசலுக்கு தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தீயினால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில், வீட்டை விட்டு வெளியே வந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.