சுதந்திர தினத்தில் வானத்தில் பறக்கும் விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பு செய்தது இந்தியா

0
218

இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இரண்டு டோர்னியர்-228 ( Dornier 228 ) கடல்சார் உளவு விமானங்களில் முதலாவது விமானம் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

தரையிறங்கிய விமானத்திற்கு விமான நிலையத்தில் நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது.

அத்துடன் விமானத்தை இலங்கை விமான படைக்கு கையளிக்க இந்திய கடற்படையின் உப தளதிபதி வைஸ் எட்மிரல் சதீஸ் என் கோர்மடே இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

2022 ஏப்ரலில் இந்தியாவிற்கு விமானப் பயிற்சிக்காக 15 பேர் கொண்ட குழுவினரை இலங்கை விமானப்படை அனுப்பியது, அவர்கள் பயிற்சியை முடித்து, விமானத்தை பறக்கவும் பராமரிக்கவும் தகுதி பெற்றுள்ளனர்.

இந்திய பொறியாளர்களின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்ற 15 இலங்கை விமானப்படை தரைக் குழுவினரால் விமானம் பராமரிக்கப்பட உள்ளது.

பதிய விமானத்தை இந்தியா தயாரிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் இந்த விமானம் இலவசமாக வழங்கப்படும் இலங்கைக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானம் தயாராகும் வரை இரண்டு ஆண்டுகளுக்கு இடைக்காலமாக இந்த விமானம் பயன்பாட்டிலிருக்கும்.

டோனியர் இலகு ரக உளவு விமானமானது குறுந்தூரத்தில் விண்ணுக்கு செலுத்தக்கூடிய மற்றும் தரையிறக்கக்கூடிய வசதி வாய்ப்புக்களை கொண்டுள்ளதோடு, இலத்திரணியல் யுத்த நடவடிக்கைகள் கடற்கண்காணிப்பு அனர்த்த நிலைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது பயன்படுத்தக்கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here