மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சியினால் எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை குறைக்க முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1200 ரூபாவிற்கும் முட்டை 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்குள் சோளத்தை இறக்குமதி செய்ய முடியும் என்றார்.