இலங்கை கனியவள எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
- ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒக்டேன் 95 பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன் விலை 475 ரூபாவாக தொடர்கிறது.
- சாதாரண டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாக உள்ளது.
- சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 478 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் விலை 528 ரூபாவாக அதிகரித்துள்ளது.
- மண்ணெண்ணெய் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அதன் விலை 285 ரூபாவாக தொடர்கிறது.
