பாணந்துறை வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டதாக தகவல்

0
23

பாணந்துறையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர், மகாநாம வீதியிலிருந்து தனது வீட்டுக்குச் செல்லும் பக்கவீதியில் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) இரவு சுமார் 10.00 மணியளவில், குறித்த வர்த்தகர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு காரில் வந்த குழுவினர், வர்த்தகரின் வீட்டிற்கு அருகில் அவரது காரை தாக்கி, வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து அவரைக் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அவரது இரண்டு மகள்களுக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அவரது மனைவி காயமடைந்த நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடத்த முயன்றபோது வர்த்தகர் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தியதாகவும், பின்னர் கார் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகாலில் விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்து, வர்த்தகரை வெளியே இழுத்து தாக்கி, தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் சம்பவம் வர்த்தகரின் உறவினர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸாருக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பாணந்துறை தெற்கு பொலிஸார் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் வர்த்தகரின் வாகனம் சேதமடைந்துள்ளதுடன், பாணந்துறை பிரிவு குற்றத்தடய விசாரணைப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here