22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

0
159

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீட்டிப்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, நாட்டின் பல முக்கிய நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கி எதிர்ப்பு பேரணிகளை நடத்துவதற்கும், கொழும்பில் பாரிய மக்கள் பேரணியொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக சுமார் 100,000 பேரை கொழும்புக்கு அழைத்து வர எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த பாரிய மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை மிக விரைவில் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here