மேலும் ஒரு முக்கிய புள்ளி கைது!

0
168

“வனாத்தே சது” – கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா

துபாய் பாதுகாப்புப் பிரிவினரால் “வனாத்தே சது” என்ற புனைப்பெயரில் அறியப்படும் அவிஷ்க மதுஷான் அபேகுணவர்தன என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை சலிந்து மற்றும் ஹரக் கட்டா போன்ற குற்றவாளிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் வைத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here