நாட்டை கொள்ளை அடித்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து செயற்படுவேன் – ரஞ்சன்

Date:

மக்களிடமிருந்து தன்னை பிரித்தெடுக்கவே முடியாது எனவும் மீண்டும் அரசியலில் குதிப்பதாகவும் விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சூளுரைத்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நிபந்தனையுடனான பொது மன்னிப்பின் கீழ் இன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து வெளியேறிய அவருக்குச் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அமோக வரவேற்பளித்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“என் வாழ்நாளில் இன்று மறக்க முடியாத நாள். எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது. எனது விடுதலைக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. நான் எவருக்கும் பயந்து அடிமையாக இருக்க மாட்டேன். மக்களிடமிருந்து என்னை எவரும் பிரித்தெடுக்கவே முடியாது. நான் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பேன். நான் மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். இந்த நாட்டின் அப்பாவி மக்களை வதைத்து – நாட்டைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக எனது நடவடிக்கைகள் தொடரும்” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...