இந்திய போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் – 3 சீன போர்க்கப்பல்களும் வருகை

0
202

இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ்.மும்பை’ 3 நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு வருவது இதுவே முதல்முறை. அதே சமயத்தில் இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு இந்திய கப்பல் செல்வது இது 8வது தடவை ஆகும்.

163 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலில் 410 ஊழியர்கள் உள்ளனர். கடற்படை வழக்கப்படி, இலங்கை கடற்படை வரவேற்பு அளித்தது.

3 நாட்களும் ஊழியர்கள் இலங்கையை சுற்றி பார்ப்பார்கள். இலங்கை கடற்படையுடன் சேர்ந்து, யோகா, கடற்கரையை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளையும் செய்வார்கள்.

29-ஆம் திகதி கப்பல் அங்கிருந்து புறப்படும். முன்னதாக, நேற்று காலை சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தன. இந்த கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட நிலையிலேயே இந்திய போர் கப்பலும் இலங்கை வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here