நிலாவெளி – பெரியகுளம் விகாரை நிர்மாணப் பணிக்கான அனுமதி மீண்டும் மறுப்பு!

Date:

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதேச செயலகத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்ட காரர்களால் இக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

திருக்கோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு சமூகமாகும். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறானதொரு செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக செயற்படுவீர்கள் என தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...