‘பிரஜா சக்தி’ குழுவே கிராமத்தின் அரசாங்கம்

0
157

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கிராமத்திற்கும் அரசாங்கம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும், அது ‘பிரஜா சக்தி’ குழு எனவும் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்து கிராமத்திற்கும் ஒரு அரசாங்கத்தை கொண்டு வந்து கொடுத்துள்ளோம். ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் பிரஜா சக்தி குழுக்கள் இதுவாகும்.

அப்படியானால் பிரஜா சக்தி குழுவின் தலைவர் யார்? தலைவர். இனிமேல் கிராமத்தை நீங்கள் தான் கவனித்துக்கொள்ள வேண்டும். எனவே, கிராமத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் என்ன என்பது தொடர்பான தீர்மானங்கள் கிராமத்திற்குள்ளேயே எடுக்கப்பட வேண்டும்.

எமது இந்த அமைப்பு அவை தொடர்பில் கண்காணிக்க வேண்டும். NPP என்பது அரசாங்கம் அல்ல, அது ஒரு கட்சி. அதாவது, நீங்கள் ஆட்சியாளர்களாகியுள்ளீர்கள். வாக்களித்துவிட்டு ஓரமாக ஒதுங்கி நிற்கவில்லை; கிராமத்தை நிர்வகிக்கிறீர்கள்.”

தேசிய மக்கள் சக்தியின் யட்டிநுவர, மல்கம்மன தொகுதி சபையை மறுசீரமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அமைச்சர் கே. டி. லால்காந்த இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here