ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று (29) அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதில் ‘தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பாக்குவதே எனது ஒரே நோக்கமாகும்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களில், கடவுச்சீட்டு வரிசை முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிசையின்றி விரைவாக கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்க, ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் இணைந்து இயக்கும் 25 சேவை மையங்கள் நிறுவப்படும்.
பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பெற முடியும் என்பதை உறுதி செய்ய அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களும் இலங்கை அரசாங்க வலையமைப்புடன் (Lanka Government Network) இணைக்கப்படும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.