புதிய கட்டண முறையால் மூடப்படும் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Date:

பெற்றோல் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம்  அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறைமையினால் நாளாந்தம் 400க்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய முறையின்படி எரிபொருளை பெறுவதற்கு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் உரிய தொகையை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும்.

அந்தக் காலத்திற்கு முன்னர் பணம் செலுத்தத் தவறினால், மறுநாள் எரிபொருள் கூடத்தின் உரிமையாளர்களுக்கு எரிபொருள் விடுவிக்கப்படாது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதிய அளவு எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் ஒரே நேரத்தில் பெருந்தொகையை வசூலிக்க முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, புதிய முறைப்படி, எரிபொருள் பெறுவதற்கு முன், அனைத்து பணத்தையும் செலுத்துவது, பல நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...