விளையாட்டுத்துறையில் வெற்றி பெறுவதற்காக முறையான பொறிமுறை மிகவும் அவசியமாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விளையாட்டுக் கொள்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பதக்கம் மற்றும் தேசிய மட்டத்தில் உள்வாங்கப்படுதல் என்ற அடிப்படையில் மாத்திரம் இலங்கையின் விளையாட்டு முறைமைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கிராமிய மட்டத்தில் கரப்பந்தாட்ட மைதானங்கள் இருந்ததுடன், விளையாட்டு வீரர்கள் வளர்க்கப்பட்டனர். இன்று விளையாட்டு அரசியலாக்கப்பட்டு இவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை நிவர்த்திப்பதற்காக – விளையாட்டுத்துறையில் வெற்றி பெறுவதற்காக முறையான பொறிமுறையைத் தேசிய மக்கள் சக்தி அறிமுகப்படுத்தும்.” – என்றார்.