வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தம்

Date:

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா விடுத்துள்ள அறிவிப்பின்படி, மேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் கணனி முறைமை புதுப்பித்துள்ளமையினால், குறித்த செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதி வரை வாகன வருவாய் உரிமம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும், செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை அபராதமின்றி மீளப்பெற முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளத்தை அணுகுவதன் மூலம், ஆன்லைன் முறையின் கீழ் வாகன வருமான உரிமங்களைப் பெறுவது செப்டம்பர் 24 நள்ளிரவு முதல் அக்டோபர் 6 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கேஸ் விலை உயர்வு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு...

நாடு திரும்புகிறார் ரணில்!

சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

ஒரு வாரத்தில் 500 லட்சம் பணம் தேடுவேன் – லால்

புதிய சொகுசு வீடு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட சர்ச்சைக்கு...

மோசடி தொடர்பில் LNW வாசகர்களுக்கு எச்சரிக்கை!

அன்புடைய வாசகர்களே, இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா?...