சஜித் பிரேமதாச ஒரு பாரம்பரிய அரசியல்வாதி என்றும், அவர் மாற்றத்தை விரும்பாதவர் என்றும், அவரிடமிருந்து நாடு வேறு மாற்றம் எதையும் எதிர்பார்க்க முடியாது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தாம் நம்பும் அரசியல் நீரோட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நகரவில்லை என்றும் காலாவதியான மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரம்பரிய அரசியல் அமைப்பில் தான் நகர்வதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சில பின்வரிசை எம்.பி.க்கள், கட்சி எடுத்து வரும் தவறான பாதையை அறிந்திருந்தும் தங்கள் கருத்துக்களை வெளியிட அஞ்சுவதாகவும் அவர் கூறுகிறார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வேட்பாளராக நியமித்தால் கட்சிக்கும் நாட்டுக்கும் வெற்றியைக் காட்டத் தயார் எனவும் தற்போதுள்ள ஆட்சியை கவிழ்த்து புது ஆட்சி அமைக்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.