பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (05) இரவு மிரிஹான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் தொகை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நீண்ட காலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மஹிந்த கஹந்தகமவுடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றொரு நபரும் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
