ரணில் முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என கோட்டா புகழாரம்

Date:

“இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை அடியோடு நிராகரித்து – சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பாராட்டுகின்றேன்.”

  • இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதிப் பதவியிலிருந்து நான் விலகியபோது புதிய ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவைப் பரிந்துரைத்திருந்தேன். அதற்கமைய நாடாளுமன்றம் அவரைப் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது.

ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை அவர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் காட்டி வருகின்றார்.

இலங்கை இறைமையுள்ள நாடு. இங்கு வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை. நாடாளுமன்றத்தை மீறி எவரும் முடிவுகளை எடுக்க முடியாது. நாடாளுமன்றத் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். உண்மையில் அவர் சிறந்த தலைவர்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...