நசீரின் எம்பி பதவி பறிபோகிறது, வெளியானது அதிரடி அறிவிப்பு!

0
138

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நஸீர் அஹமட் நீக்கப்பட்டதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, அதற்கு பொருத்தமான வேட்பாளர் யார் என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதுடன், உரியவரின் பெயர் குறிப்பிடப்பட்டவுடன் அது வர்த்தமானியில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here